மகளிர்மணி

சமையல் டிப்ஸ்

26th Jun 2022 04:33 PM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக் கடலை ஆகியவற்றை பச்சையாக மிக்ஸியில் பொடித்து,  கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.

காய்கறிகளை வதக்கும்போது, எண்ணெயில் அரை தேக்கரண்டி சாலட்டைப் போட்டுவிட்டு வதக்கிப் பாருங்கள். எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அடிப் பிடிக்காமல் சீக்கிரம் வதங்கும். உப்புடன் வதங்குவதால் காய் அருமையாக இருக்கும்.

காராமணி உலர்ந்தும், முற்றலாகவும் இருந்தால் அதை விரல் நீளத்துக்கு வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி பொரித்து சாப்பிட்டால் கரகரவென்று ருசியாக இருக்கும்.

ADVERTISEMENT

ஊத்தப்பத்தின் நடுவில் துவாரம் செய்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் மேலும் கொரகொரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

தோசை வார்க்கும்போது சில சமயங்களில் ஓட்டிக் கொள்ளும். இதைத் தவிர்க்க கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெயுடன் அரை தேக்கரண்டி உப்பு போட்டு கலந்து தேய்த்துவிட்டு பிறகு சுட்டால் நன்றாக வரும்.

வறுத்த ரவையில் தோசை வார்த்தால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

தேங்காயை நன்றாகத் துருவி வைத்துகொள்ளுங்கள்.  தோசை வார்க்கும்போது, தேங்காய்த் துருவலை தோசை மேல் தூவி வார்த்தால் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி மீதமாகிவிட்டால் உதிர்த்து ஏலக்காய் பொடித்து 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு தேங்காய்த் துருவலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

இட்லிக்கு அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக உளுந்தை ஊறப் போட்டாலே போதும். பிறகு ஆட்டினால் உளுந்து மாவு நிறைய வரும். அதேபோல், இட்லியும் பூப்போல் இருக்கும்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் அரிசியைக் கொதிநீரில் ஊறவைத்து அரையுங்கள். மாவு சீக்கிரமாக அரைந்துவிடும்.

இட்லி உப்புமா தயாரிப்பதாக இருந்தால் முதலில் இட்லிகளை ஃப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து உதிர்த்தால் பிசுபிசுப்பு இல்லாமல் பொலபொலவென்று உதிர் உதிராக விழும். உப்புமா செய்ய சுலபமாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT