மகளிர்மணி

வரகரிசி இட்லி உப்புமா

26th Jun 2022 04:26 PM | எம்.எஸ்.லட்சுமிவாணி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

வரகரிசி- ஒரு  கிண்ணம்
துவரம்பருப்பு- அரை கிண்ணம்
புளி- எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய்-2
காய்ந்த மிளகாய்-8
பெருங்காயத் தூள்- 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு- தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:  

ADVERTISEMENT

வரகரிசி, துவரம் பருப்பு, புளி, காய்ந்த மிளகாயை  ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில், ஐந்து நிமிடம் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு வேக வைத்த இட்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கி, கறிவேப்பிலையைத் தூவவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT