தேவையானவை:
பனங்கிழங்கு-4
தேங்காய்ப் பால்- ஒரு கிண்ணம்
பனை வெல்லக் கரைசல்- அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்- சிறிதளவு
முந்திரி, திராட்சை- தலா ஒரு தேக்கரண்டி
நெய்- ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ADVERTISEMENT
பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல் உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து அடி பிடிக்காது சில நிமிடங்கள் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்தவுடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். பனங்கிழங்கு பாயாசம் ரெடி.