மகளிர்மணி

நவதானிய அடை 

12th Jun 2022 07:03 PM | ஆர்.ஜெயலெட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

புழுங்கலரிசி- 200 கிராம்
முளை கட்டிய கொள்ளு, சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, பாசிப்பயிறு, காராமணி, கறுப்பு உளுந்து, கொண்டை கடலை- தலா 50 கிராம், இஞ்சி- 2 துண்டு, மிளகு- 10, மிளகாய் வற்றல்-5, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை: 

ADVERTISEMENT

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து களைந்து இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். முளை கட்டிய நவ தானியங்கள், பாசிப்பயிறு, கறுப்பு உளுந்து, கொண்டை கடலையைத் தனியாக அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து வைத்து காய்ந்ததும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி பரவலாக இழுத்து, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT