மகளிர்மணி

குளிக்கும் முன் கவனிக்க வேண்டியவை...!

31st Jul 2022 06:00 AM | எம்.எஸ்.லட்சுமிவாணி

ADVERTISEMENT

 


எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.

ஒரு தேக்கரண்டி லாவண்டர் ஆயில் அல்லது ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை குளிக்கும் நீரில் கலந்து உபயோகிக்கலாம்.

கற்றாழையை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கலாம்.  இதனால் சருமம் பளபளக்கும். தோல் நோய்கள் வருவதும் தடுக்கப்படும்.

ADVERTISEMENT

பாசிப்பருப்பை பொடி செய்து, மஞ்சளுடன் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இது சருமத்தின் மீதுள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை அழித்துவிடும்.  இவ்வாறு குளிக்கும்போது, சோப்பு பயன்படுத்தக் கூடாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT