மகளிர்மணி

பால் காய்ச்சும்போது கவனிக்க வேண்டியவை!

31st Jul 2022 06:00 AM | ஆர்.ராமலெட்சுமி

ADVERTISEMENT

 

பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

பால் பொங்காமல் இருக்க பால் சட்டியில் சிறிய சில்வர் தட்டை போட்டலாம். பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும்.

தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

பாலைக் காய்ச்சும் முன் பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடாது.

பால் பாக்கெட்டை பிரிஜ்ஜில் வைத்து, பாலை காய்ச்சும் முன் குளிர் கொஞ்சம் குறைந்தவுடன் காய்ச்சினால் கெடாது.

ப்ரிஜ் இல்லாதவர்கள் தண்ணீர் ஊற்றிய டப்பிக்குள் பால் உள்ள பாத்திரத்தையோ, பக்கெட்டையோ வைக்கவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT