தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து, பால்- தலா கால் கிண்ணம்
சர்க்கரை- 1 தேக்கரண்டி
உப்பு, கடலை எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ADVERTISEMENT
பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைக்கவும். அதனுடன் பால், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து ஒரு குழி கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக காரச் சட்டினியுடன் பரிமாறவும்.