மகளிர்மணி

பால் பணியாரம்

17th Jul 2022 06:00 AM | அ.ப.ஜெயபால்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து- கால் கிண்ணம்
உப்பு- 3 சிட்டிகை
ஏலக்காய்த் தூள்- சிறிது
தேங்காய்ப் பால்- 3 டம்ளர் 
அல்லது பசும்பால்- ஒரு லிட்டர்
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலில் ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் லேசாக சூடு செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக மொறுமொறுவென்று பொரித்தெடுத்து, தேங்காய்ப் பாலில் போட்டு பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT