மகளிர்மணி

பேரீச்சம்பழ பாசிப் பருப்பு பணியாரம்

17th Jul 2022 06:00 AM | அ.ப.ஜெயபால்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

பாசிப் பருப்பு மாவு- அரை கிண்ணம்
உளுந்து மாவு- கால் கிண்ணம்
பேரீச்சம்பழம்-6 (நறுக்கியது)
சமையல் சோடா- சிறிதளவு
ஏலக்காய்த் தூள்- கால் தேக்கரண்டி
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகச் சேர்த்து பேரீச்சம் பழத்தையும் கலந்திடுங்கள். அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தைக் கொட்டி தண்ணீர் ஊற்ற, பாகு காய்ச்சி வடிக்கட்டி கொள்ளவும். அத்துடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துகொள்ளவும். பின்னர், உளுந்து, பாசிப் பருப்பு மாவு, பேரீச்சம் பழம் கலவையையும் வெல்லப் பாகுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். பின்னர், பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய்த் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT