மகளிர்மணி

அவல் தேங்காய் கேசரி

3rd Jul 2022 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

அவல்- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 மூடி
வெல்லம்- 100 கிராம்
ஏலக்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
முந்திரி-5
நெய்- தேவையானது

செய்முறை: 

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு அதில் வெல்லத்தைப் போட்டு கரைந்தவுடன் வடிகட்டவும். அதை மீண்டும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் அவல் சேர்த்து கிளறி விடவும்.  பின்னர், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளற வேண்டும். அவ்வப்போது நெய் சிறிது சேர்க்கவும். கலவை சற்று கெட்டியானவுடன் ஏலக்காய்த் தூள் தூவி இறக்க வேண்டும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT