மகளிர்மணி

செஸ் போட்டியில் சாதிக்க கர்ப்பம் தடையல்ல!

தினமணி

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார் 8 மாத கர்ப்பிணியும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான துரோணவல்லி ஹரிகா.

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு ஆகியன சார்பில் செஸ் விளையாட்டின் மிக உயர்ந்த போட்டியான செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆகஸ்ட்10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  

இதில் துரோணவல்லி ஹரிகா: ஆந்திர மாநிலத்துக்குள்பட்ட குண்டூரைச் சேர்ந்த ரமேஷ்-ஸ்வர்ணா துரோணவல்லி தம்பதியின் மகள் ஹரிகா பங்கேற்கிறார். சிறுவயதிலேயே செஸ்ஸில் ஆர்வமுடன் பங்கேற்ற ஹரிகா, யு-10 யூத் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் பயிற்சியாளர் ராமராஜுவின் தீவிர மேற்பார்வையில் சிறப்பாக ஆடிய நிலையில், கொனேரி ஹம்பிக்கு பின் கிராண்ட்மாஸ்டர் ஆன இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

2011-இல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற ஹரிகா, 2012, 2015, 2017-இல் உலக மகளிர் செஸ் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை தன்வசப்படுத்தினார். அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளும் மத்திய அரசு அவருக்கு அளித்து கெளரவித்துள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த கார்த்திக் சந்திராவை 2018-இல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பிரதான இந்திய அணியில் ஹரிகாவும் இடம் பெற்றுள்ளார்.

8 மாத கர்ப்பிணி: ஏற்கெனவே சென்னையில் கடந்த மே மாதம் முதல் கட்டப் பயிற்சி முகாமில் ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் கெல்பாஃண்ட் ஆகியோர் கீழ் பயிற்சி பெற்றார்.  இதற்கிடையே ஹரிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

""நாட்டிலேயே முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆட ஆர்வமுடன் உள்ளேன். டவுள் அருள் இருக்க வேண்டும்.

கர்ப்பிணியாக உள்ளதால் மனதளவில் மட்டுமில்லாமல், உடல்ரீதியாகவும் போட்டிக்கு தயாராக வேண்டும். குழந்தை பிறந்த பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ûஸ முன்னோடியாக கொண்டேன்.  இந்திய மகளிர் அணி மிகவும் வலுவாக உள்ளது. கண்டிப்பாக பதக்கம் வெல்வோம். அணிக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதால், இந்தியாவில் செஸ் விளையாட்டு மறுமலர்ச்சி பெறும். ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும்,  மேலும் அதிக வளர்ச்சி பெறும்'' என்றார் ஹரிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT