மகளிர்மணி

மூலிகை மருத்துவம்

3rd Jul 2022 06:00 AM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 

இஞ்சியில் பொட்டாசியம், கால்சியம் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. அவை ரத்த அழுத்தம், ஆரோக்கியமான எலும்புகளை இயல்பாக்குவதற்கு உவுகிறது. இதில், நார்ச்சத்து உள்ளதால், குடல் உணவை நகர்த்த உதவுகிறது. மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, வீக்கத்தைக் குறைக்கிறது.

ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்தச் சோகை குணமாகும். ஜலதோஷம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சரும நோய்கள் முதலியன அவ்வளவாகப் பாதிப்பதில்லை.

திராட்சை உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. கோழையை அகற்றும் ஜீரண உறுப்புகளுக்கு வலிமை தருவதுடன், அது பழுதுபட்டால் அதைத் தீர்க்கும் சக்தியும் கொண்டது.

ADVERTISEMENT

ஆலப்புழை மஞ்சள்தான் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வெந்தயம் வடநாட்டவர்களால் மேத்தி என குறிப்பிடப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT