மகளிர்மணி

பாசிப் பயிறுக் குழம்பு

3rd Jul 2022 06:00 AM | -ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

பாசிப் பயிறு- 100 கிராம்
தக்காளி-4
வெங்காயம்-4
பூண்டு- 1 பல்
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
புளி- ஒரு சிறு உருண்டை
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். பாசிப்பயிற்றை வறுத்து தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும். புளியை கரைத்து உப்பு சேர்க்கவும். பூண்டைத் தட்டி வைக்கவும். பயிறு வெந்ததும் தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயம் , கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிப் போட்டு குழம்பைக் கொதிக்க வைத்து இறக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT