மகளிர்மணி

பனங்கிழங்கு  பொடி 

சுந்தரி காந்தி

தேவையானவை

பனங்கிழங்கு -   4
மிளகாய் வற்றல்  -   2
பூண்டு -  4 பல்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் -  சிறிது

செய்முறை: 

பனங்கிழங்கு மேல் தோல் உரித்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் பனங்கிழங்கு சேர்த்து வேக விடவும். குக்கர் ஐந்து சத்தம் வந்த பின் இறக்கி இருபது நிமிடம் ஆற விடவும். 

பின் கிழங்கை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி நார் நீக்கி தனியே வைக்கவும். நறுக்கிய துண்டுகளை நன்கு காயவிடவும். இரண்டு நாள் காய்ந்த பின் இதனை,பூண்டு பல், மிளகாய் வற்றலுடன்  மிக்ஸியில்  இட்டு பொடிக்கவும். 
இந்த பொடியினை காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து சாப்பிடவும். அதிக நார் சத்து நிறைந்த  இந்த பொடி  மலசிக்கல் நீக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT