மகளிர்மணி

இடம் பெயர்ந்தாலும் இலக்கியம் வளர்ப்போம்!

பொ. ஜெயசந்திரன்


வளைகுடா தமிழ்ச்சங்க அமைப்பின் தலைவராகவும், சவுதி அல்கோபர் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றத்தின் தலைவியாகவும் பொறுப்பு வகித்தவர், பன்னாட்டு மின்னிதழின் ஆசிரியர், மேடை பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் பாக்கியலட்சுமி வேணு. இவர், "நினைவில் நிழல்கள்', "காப்பியக் கனவுகள்', "கனவு காணுங்கள்' ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். அவர், தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

""சொல்வேந்தர் மன்றம் என்பது அனைவராலும் அறியப்பட்ட அமைப்பாகும். சவுதி நாட்டின் சட்டங்களுக்குட்பட்டே அங்கே இயங்குகின்றன. உலக மொழிகளில் இவ்வமைப்பு மூலம் பேச்சுக்கலையில் சிறந்து விளங்கும் ஒரு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து அதன் வழியாக தலைமைத்துவ பண்புகளை வெளிக் கொணரவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சொல்வேந்தர் மன்றங்கள் உள்ளன. அவற்றில் முதலாவதாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்த மொழியின் வளத்தை மேம்படுத்துவதில் இங்குள்ள தமிழர்களின் பங்களிப்பு பெருமைக்குரியது.

தமிழ் மொழி என்றும் ஒற்றைப் புள்ளியில் கைகோர்த்து தமிழ் சமூகமாக திரண்டு தமிழர்களின் பண்பாட்டு விழாக்களை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் பறைசாற்ற சொல்வேந்தர் மன்றம் நெம்புகோலாக விளங்குகிறது, சவுதியில் 13வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தேன். அங்கே அல்கோபர் சொல்வேந்தர் மன்றத்தில் என்னை இணைந்துக் கொண்டு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் களமாக்கினேன். பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன்.

சிறார்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்த மன்றத்தில் பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், மாறுவேடம் என தமிழ்ச் சிந்தனை கொண்டு பறக்கும் ஆர்வத்தை ஊட்டினேன். சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்யாவும்; கொணர்ந்திங்கு சேர்ப்பீர். என்னும் பாரதி வரிகளில் பொதிந்துள்ள இலக்கியச் செல்வத்தை புலம்பெயர்ந்த வரிகளின் மின்னிதழாக வெளியிட்டு மிளிரச் செய்தேன்.

இவையணைத்திற்கும் மகுடமாக அல்கோபர் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றத்தின் தலைவியாக அங்கம் வகித்தேன். வானத்தை எட்டிப்பிடிக்க உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை அவசியம் என்பதை அல்கோபர் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.

பன்னாட்டு மின்னிதழின் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் குறித்து?

வலைத்தமிழ் மின்னிதழின் நிறுவனர் பார்த்தசாரதி எனக்கு சவுதி அரேபியாவில் பன்னாட்டு ஆசிரியராக பொறுப்பு வழங்கினார். அந்த மின்னிதழின் மூலம் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் பல்வேறு இந்திய நிகழ்ச்சிகள், குறிப்பாக நம் நாட்டு குடியரசு-சுதந்திர தினக் கொண்டாட்டம், தமிழர்களின் கலாசார நிகழ்வுகளின் பன்னாட்டு புகைப்படங்கள் மற்றும் தகவல்களை கட்டுரையோடு வெளியிட்டிருந்தேன.

மேலும் வலைத்தமிழ் தொலைக்காட்சியில் பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் என்னும் தொடரின் நெறியாளராக புலம் பெயர்ந்த தமிழர்களை நேர்காணல் செய்தேன். இந்த அனுபவம் என்னை பன்னாட்டு சிறப்பிதழ் வெளியிட ஊன்று கோலாக விளங்கியது. "தமிழறம்' என்னும் பதிப்பாசியர் என்னைத் தொடர்பு கொண்டு தீபாவளி காலாண்டு இதழின் சிறப்பாசிரியராக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அதன் படி அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா போன்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் கவிதை, கட்டுரை, நேர்காணல், சிறுகதை, நூல் அறிமுகம் என கலைச் செல்வமாக்கி வெளியிட்டுள்ளேன்.

வளைகுடா நாடுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சி எப்படி உள்ளது?

தற்பொழுது தமிழ் மொழிக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென்று ஒரு அமைச்சரவை ஏற்படுத்தியுள்ளார்கள். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், வெளிநாடு வாழ் தமிழ்க்குழந்தைகளின் தமிழ் மொழி பயில பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சவுதியில் மூன்றாவது மொழியாக நம் நாட்டு மொழியினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவ்வாறே தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழியை படித்து வருகின்றனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT