மகளிர்மணி

சேனைக்கிழங்கு நறுக்கும்போது...

26th Jan 2022 06:00 AM | அமுதா அசோக்ராஜா

ADVERTISEMENT

 

உளுந்து வடைக்கு மாவு எந்த பதத்தில் அரைத்தாலும் வடை சுடும் போது சற்று எண்ணெய் இழுக்கும். 1/4 கிலோ உளுந்து மாவிற்கு 2 ஸ்பூன் சோள மாவு என்ற கணக்கில் சேர்த்து வடை சுட்டால் எண்ணெய் அதிகம் இழுக்காத மொறுமொறு வடை கிடைக்கும். 

பர்ஃபி, மைசூர்பாகு போன்ற ஸ்வீட்கள் செய்யும்போது, வீட்டில் அவற்றின் மேலே வைக்கிற பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழாமல் இருக்க,நெய் தடவிய தட்டில் முதலிலேயே இவற்றைத் தூவி, பிறகு ஸ்வீட் கலவையை இவற்றின் மேலே கொட்டி, ஆற விட்டு, துண்டுகள் போட்டால் நன்றாக ஒட்டிக் கொள்ளும்

குழம்பு வைக்கும்போது அதில் தண்ணீரோ அல்லது உப்போ அதிகமாகி விட்டால், கவலை வேண்டாம். 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனுடன் 3 டேபின் ஸ்பூன் தயிர் கலந்து குழம்பில் சேர்க்கவும். சுவையும் கூடுதலாகக் கிடைக்கும்!

ADVERTISEMENT

உருளைக்கிழங்கை மசித்து செய்யும் உணவுகளில் சிறிதளவு ஓமம் சேர்த்து செய்ய நல்ல மணத்துடன் இருக்கும். மேலும் வாயுத்தொல்லை நீங்கும்.

ஆப்பத்துக்கு பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அரைத்தால் மொறுமொறு என ஆப்பம் இருக்கும்.

பலகாரம் செய்யும்போது கொய்யா இலையை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

தக்காளியின் தோல் நீக்க மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் தக்காளியை சிறிது கீறிவிட்டுவெந்நீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.

சேனைக்கிழங்கு நறுக்கும் முன்பாக கையில்  தேங்காய் எண்ணெய்தடவிக்கொண்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.

கோதுமை மாவில் இளநீரை விட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும்.சாஃப்ட்டாகவும் இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டை வெட்டிப் போட்டால் குழம்பில் கசப்பு தெரியாது.

கறுத்த புளியில் சாம்பார் வைத்தால் கறுப்பாக இருக்கும். அதற்கு சிறிது தேங்காய்ப்பால் சேர்த்தால் சாதாரண நிறத்துக்கு வந்து விடும்.

Tags : magaliarmani
ADVERTISEMENT
ADVERTISEMENT