மகளிர்மணி

ஜவ்வரிசி பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

ஜவ்வரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
நெய் - 4 தேக்கரண்டி
முந்திரி - 8
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 50 கிராம்

செய்முறை:

ஜவ்வரிசியை சிறிது சிறிதாக நெய் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பை மலர வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். வடித்த தண்ணீரில் உடைத்த ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி வெந்ததும் அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லத்தை கரைத்து சேர்க்கவும். இந்த கலவை ஒன்றோடு ஒன்று நன்கு கலந்ததும். வாணலியில் நெய்யை காய வைத்து பொடியாக நறுக்கிய முந்திரி, ஏலக்காய்த்தூள், கிஸ்மிஸ் பழம் சேர்த்து தாளித்து கொட்டி ஐந்து நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT