மகளிர்மணி

கடலைப்பருப்பு பொங்கல்

12th Jan 2022 06:00 AM | ஆர்.  ஜெயலட்சுமி.

ADVERTISEMENT

 

தேவையானவை:

கடலைப் பருப்பு - 300கிராம்
நெய் - 100 கிராம்
அரிசி - 300 கிராம்
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

ADVERTISEMENT

கடலைப்பருப்பை நெய்விட்டு வறுத்து தண்ணீரில் வேக வைத்து அரிசியைக் களைந்து போட்டு முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவல், சர்க்கரை கலந்து நன்றாக கிளறி வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி ஆறிய பிறகு சாப்பிட சூப்பராக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT