மகளிர்மணி

31 ஆண்டுகால அரசியல்!

12th Jan 2022 06:00 AM | கோட்டாறு. ஆ. கோலப்பன்

ADVERTISEMENT

 

ஜெர்மனியின் புதிய பிரதமராக ஓலாஃப் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 16 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பை வகித்து வந்த ஏஞ்சலா மெர்கெல் என்னும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.இத்துடன் அவரது 31 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வருகிறது.

சோவியத் யூனியன்கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்த முன்னாள் விஞ்ஞானியான இவர், கடந்த 2005 -ஆம் ஆண்டு நவம்பர் 22- ஆம் தேதி ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றபோதே அந்த நாட்டின் வரலாற்றில் அவருக்கென்று ஒரு நீங்கா இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

தனது 16-ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏஞ்சலா மெர்கெல் உலக அரங்கில் ஜெர்மனியின் செல்வாக்கை உயர்த்தியதாகப் பாரா ட்டப்படுகிறார். ஐரோப்பிய யூனியனில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப்பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஏஞ்சலா மெர்கெல் அதனை திறம்பட சமாளித்து பெண்களுக்கான முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

67 வயதாகும் அவர், ஜெர்மனியில் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த இரண்டாவது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அவருக்கு முன்னாள் கடந்த 1982- ஆம் ஆண்டு முதல் 1998 -ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த ஹேல்மட்கோல், ஏஞ்சலாமெர்கெலை விட ஒரு வாரம் மட்டும்தான் கூடுதலாக ஆட்சி செலுத்தி உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT