மகளிர்மணி

தினைப் பொங்கல்

12th Jan 2022 12:00 AM | ஆர்.  ஜெயலட்சுமி.

ADVERTISEMENT

 

தேவையானவை:

தினை அரிசி - 200 கிராம்
பாசிப் பருப்பு - 250 கிராம்
வெல்லம் - 300 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 6
திராட்சை - 6
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சுக்குத்தூள் - 1சிட்டிகை


செய்முறை:

ADVERTISEMENT

வாணலியில் பருப்பை வறுத்து, அரிசி பருப்பு இரண்டையும் தேவையான தண்ணீர்விட்டு குக்கரிலிட்டு வேக வைக்க வேண்டும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி வெந்த பொங்கலில் விட்டு நன்கு கிளறவும். பின்னர், நெய்விட்டு கிளற வேண்டும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, சுக்குத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாக கிளற வேண்டும். தினைப்பொங்கல் தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT