மகளிர்மணி

வள்ளிக்கிழங்கு மசால் தோசை

சுந்தரி காந்தி

தேவையானவை:

தோசை மாவு  - 3 கிண்ணம்
நல்லெண்ணெய் - சிறிது
வேகவைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு  - 2 
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 2
மஞ்சள்தூள் -  அரைதேக்கரண்டி 
சோம்புத்தூள் - 1தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை  - சிறிது
உப்பு, எண்ணெய்  -  தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு -  தலா அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி

செய்முறை:  

வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  பின் மஞ்சள்தூள், உப்பு, சோம்புத்தூள், மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து கிளறி தேவையான நீர் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியானதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் தடவி மாவை ஊற்றி மெலிதாக தேய்த்து சுற்றிலும்  நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதன் மேல்  மசாலாவை வைத்து மடித்து எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT