மகளிர்மணி

சிப்ஸ் மீந்துவிட்டால்  இப்படி செய்து பாருங்கள்!

தினமணி


கிரேவி வகைகள் செய்யும்போது, பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துச் சேர்த்தால் கிரேவி டேஸ்ட் சூப்பராக இருக்கும். 

எலுமிச்சை சாதம் செய்யும் போது, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.

அரிசியை 2-ஆவது முறையாக களையும்போது நீரில் வைட்டமின் ஆ6 மற்றும் ஆ12 இருக்கும். இந்த நீரை காய்கறி வேக வைப்பதற்கோ அல்லது சமையல் செய்வதற்கோ பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் மூடி வைத்தால் சில நாள்கள் வரை காய்ந்து போகாமல் இருக்கும்.

இஞ்சி பூண்டு விழுது நீண்ட காலத்திற்கு புதுசாக இருக்க அதை தயாரிக்கும் போது எண்ணெய் மற்றும் உப்பு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால் ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்.

சூப் செய்யும்போது, பிரட்டைப் பொரித்துப் போடுவதற்குப் பதில், ரஸ்கை துண்டுகளாக்கிப் போடலாம். கார்ன் பிளேக் ûஸயும் தூவி கொடுக்கலாம். பிரெட் கண்டிப்பாக தேவையென்றால் எண்ணெய் விடாமல் தோசைக் கல்லில் வாட்டி, துண்டுகளாக்கிப் போடலாம்.

மைக்ரோ ஓவனில் சமைக்கும்போது மட்டுமல்லாமல் அடுப்பில்  சமைக்கும் போதும் கையில் காட்டன்  கிளவுஸ் அணிந்து கொண்டால் சூடான தட்டுகளைத் தூக்குதல், கீழே இறக்கி வைத்த சூடான வாணலியைப் பிடித்துக் கொண்டு பதார்த்தங்களைக் கிளறுதல் போன்ற வேலைகளுக்கு எளிதாக இருக்கும்.

மீந்துபோன வாழைக்காய், உருளைக்கிழங்கு சிப்ûஸ வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

பருப்புடன் தண்ணீர், மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்தால், பருப்பு ரொம்ப மிருதுவாகவும். வாசனையோடும் இருக்கும்.

தேங்காய் அரைக்கும்போது தேங்காயின் பின்பக்கத்தில் உள்ள தோலை சீவி எடுத்துவிடவும். பின்பு சட்னி வைத்தால், ஹோட்டலில் உள்ள சட்னி போல நல்ல வெள்ளையாக இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

தேங்காய் சாதம் செய்யும்போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடி செய்து கலந்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

அரிசியையும் பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, களைந்துவிட்டு, வெண்பொங்கலோ, சர்க்கரைப் பொங்கலோ செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.

பாகற்காய் வறுவல் செய்யும்போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து, பின்னர் உப்பு, காரம் போட்டால், மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT