மகளிர்மணி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு குருமா

சுந்தரி காந்தி


தேவையானவை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு  - 200 கிராம்
வெங்காயம்  - 1
மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தக்காளி   - 1
இஞ்சி, பூண்டு விழுது -  சிறிது
தண்ணீர் - 1 கிண்ணம்                    
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க: 
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்  -2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
தாளிக்க :
பிரியாணி இலை -  1
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 1  
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது


செய்முறை: 


சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோல்  நீக்கி  சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் மூன்று  விசில் வரும்வரை வேக வைத்து எடுத்து வைக்கவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.  பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்கவும்.  வேக வைத்த  சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிளகாய், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்  தேங்காய் விழுது, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் குருமாவில் இருந்து எண்ணெய் வெளி வரும் வரை வேக விடவும்.  கொத்துமல்லி தூவி இறக்கவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு குருமா தயார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT