மகளிர்மணி

ராகி வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

சுந்தரி காந்தி

தேவையானவை: 


ராகி மாவு - 2 கிண்ணம்  
அரிசி மாவு - அரை கிண்ணம்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 100 கிராம்
வெல்லம் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய்ப் பொடி  -  சிறிது

செய்முறை: 


வாணலியை அடுப்பில் வைத்து  அரிசி, ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.  பாத்திரத்தில்  ஒன்றரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து சிறிது உப்பு , மாவு சேர்த்து கிளறவும். இட்லி பாத்திரத்தில் ஆவியில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து தோல் நீக்கி பொடித்த வெல்லம் ஏலக்காய்ப் பொடி சேர்த்து பூரணம் செய்யவும். ராகி மாவினை வட்டமாக தட்டி  பூரணம் வைத்து கொழுக்கட்டை  வடிவத்தில் பிடித்து வைக்கவும்.

அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும்.  தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து, மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,  ராகி  சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT