மகளிர்மணி

பைனாப்பிள்  கொத்சு -  (கர்நாடகா) 

9th Feb 2022 06:00 AM | எம். எஸ். லட்சுமி வாணி

ADVERTISEMENT

 

தேவையானவை:

பைனாப்பிள் துண்டுகள் 1 கிண்ணம்
துருவிய வெல்லம், கொப்பரைத் துருவல் தலா 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
கடுகு, பொடித்த வேர்க்கடலை சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஈர்க்கு

செய்முறை:

ADVERTISEMENT

பைனாப்பிள் துண்டுகளை வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், கொப்பரைத் துருவல், கறிவேப்பிலை, துருவிய வெல்லம், உப்பு, பொடித்த வேர்க்கடலை மசித்த பைனாப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை நன்கு சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பலவகை சுவைகள் நிறைந்த இந்த கொத்சு, கர்நாடக மாநில கல்யாணங்களில் தவறாது இடம் பெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT