மகளிர்மணி

கேக் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை...!

18th Dec 2022 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

கேக் 'பேக்'  செய்யும்போது, ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் "பேக்'  செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கிவிட வேண்டும்.

கேக் 'பேக்' செய்யும் டின்னில் இரண்டடுக்கு பிரவுன் பேப்பரை அளவுக்குத் தக்கபடி வெட்டி எடுத்து வெண்ணெய் பூசி வைக்க வேண்டும்.

டின்னின் முக்கால் பகுதி அளவுக்கே கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

ADVERTISEMENT

கேக் "பேக்' செய்யப்படும்போது ஓவனைத் திறந்து மூடக்கூடாது. திறந்து மூடினால் கேக்கின் மென்மைத் தன்மை பாதிக்கப்படும்.

"பேக்' செய்யப்பட்ட 'கேக்' நன்றாக ஆறியவுடன் பேப்பரோடு சேர்த்து "கேக்'கை வெளியே எடுக்க வேண்டும். அதனை அலுமினிய பாயிலில் பொதிந்து பாதுகாக்க வேண்டும்.

கேக்கில் சேர்க்கப்படும் மைதா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு, உப்பு போன்றவைகளை மூன்று தடவை சலித்தெடுக்க வேண்டும்.

கேக்கில் சேர்க்கும் வெண்ணெய்யில் உப்பு சேர்க்கக் கூடாது.

புரூட் கேக் தயாரிக்கும்போது, பழங்களின் விதைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்க வேண்டும். முந்திரி பருப்பையும் சிறிதாக நறுக்க வேண்டும்.

கேக்கை பேக் செய்யும்போது, பொடிந்து போகாமல் இருக்க சிறிய சுத்தமான டவலை சுடுநீரில் முக்கி பிழிந்து கேக்கின் மேல் பகுதியில் போட வேண்டும்.

கேக் மீது முந்திரி வைக்கும்போது, அது விழாமல் இருக்க முந்திரி பருப்பை பாலில் முக்கி கேக் மீது வைக்க வேண்டும்.

கேக் மென்மையாக இருக்க தேனையும் சேர்க்க வேண்டும்.

கேக் கலவையை கேக் டின்னில் ஊற்றும்போது, அரை பாத்திரம் அல்லது அதைவிட சற்று கூடுதலாக மட்டுமேஊற்ற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT