மகளிர்மணி

பப்பாளிப் பழஅவல் கேசரி

18th Dec 2022 06:00 AM | கவிதா சரவணன்

ADVERTISEMENT

 


தேவையான பொருள்கள்:

பப்பாளிப்பழக்கூழ் - 200 மில்லி
வெள்ளைஅவல் - 100 கிராம்
சர்க்கரை - 100  கிராம்
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி,
பச்சைக்கற்பூரம் - மிளகு அளவு
பாதாம், முந்திரி, திராட்சை தலா - 10
நெய் - 50 கிராம்

செய்முறை: 

ADVERTISEMENT

வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அவலை நன்றாக வறுத்து ரவை பதத்தில் பொடித்து வைக்க வேண்டும்.  கனமான வாணலியில் பப்பாளிக் கூழ்,  தண்ணீர், சர்க்கரை சேர்த்து பொடித்த அவலை சேர்த்துக் கிளறி அடுப்பை "சிம்'மில் வைத்து நெய் விட்டு மூடவும்.  10 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறி ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து வறுத்த பாதாம்,  முந்திரி,  திராட்சை சேர்த்து கிளறினால்,  பப்பாளி அவல் கேசரி தயார்.  கலர் தேவைப்பட்டால் கேசரி பௌடர் சேர்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT