மகளிர்மணி

கரும்புச் சாறு அருந்தினால்...!

28th Aug 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

கரும்புச்சாறில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் அதிக செறிவு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. கரும்புச் சாறில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், புற்றுநோய் செல்களை, குறிப்பாக புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

ஆயுர்வேதக் கூற்றுகளின்படி, கரும்புச் சாறில் மலமிளக்கி பண்புகள் நிறைந்திருப்பதால், இதனை அருந்துவதால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்று நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. அதில் உள்ள பொட்டாசியம் செரிமானத்துக்கான அமில சுரப்பை சீராக்க உதவுகிறது.

இயற்கையாகவே அதிக சர்க்கரையைக் கொண்டிருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கொடுக்க கூடியதாக உள்ளது. அளவாகக் குடிக்கும்போது,  நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.  இயற்கை சர்க்கரை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது ரத்த குளுக்கோஸ் அளவு அடிக்கடி அதிகரிப்பதைத் தடுக்கிறது.

ADVERTISEMENT

கரும்புச்சாற்றை தேங்காய் நீருடன் கலந்து எடுத்துகொள்வது சிறுநீர் பாதை தொற்றுகள், சிறுநீரகக் கற்கள்,  சுக்கிலவழற்சி ஆகியவற்றால் ஏற்படக்கூடிய உடல் அழற்சியைக் குறைக்க உதவும்.

கரும்புச் சாறை முகத்துக்கு மேற்பூச்சாக பயன்படுத்தினால் முகப்பரு போன்ற சரும பிரச்னைகளில் இருந்து தீர்வு பெறலாம்.  க்ளைகோலிக் அமிலம் போன்ற ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் இருப்பதால், அது செல் வளர்ச்சியை அதிகரித்து, புது செல்களை உருவாக்க வைக்கிறது. முகப்பருக்கள் உருவாகும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT