மகளிர்மணி

கவுனி அரிசி இனிப்பு

14th Aug 2022 06:00 AM | எம்.எஸ்.லட்சுமிவாணி

ADVERTISEMENT

 

தேவையானவை:

கவுனி அரிசி- அரை கிண்ணம்
சர்க்கரை- ஒரு கிண்ணம்
ஏலக்காய்- 5
நெய்- சிறிதளவு
முந்திரி- 10
தேங்காய்த் துருவல்- ஒரு கிண்ணம்

செய்முறை:

ADVERTISEMENT

நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். கவுனி அரிசியை 10 மணி நேரம் ஊற வைத்து,  ஊறிய அரிசியை குக்கரில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 விசில் வரும்வரை நன்கு வேக வைக்கவும். பிறகு மேஜை கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின்னர், சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். சிறிது கெட்டியானவுடன் வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT