மகளிர்மணி

கவுனி அரிசி அல்வா

14th Aug 2022 06:00 AM | எம்.எஸ்.லட்சுமிவாணி

ADVERTISEMENT

 

தேவையானவை:

கவுனி அரிசி மாவு- ஒரு கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
நாட்டு சர்க்கரை- ஒரு கிண்ணம்
முந்திரி, திராட்சை, பாதாம்- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

கவுனி அரிசியை முதலில் ஊற வைத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் நெய்விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் நெய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கவுனி அரிசி, கரைத்த கருப்பட்டி, தண்ணீர் சேர்த்து நன்கு கைவிடாமல் கிண்ட வேண்டும். நன்கு வாசனை வர வெந்தவுடன் நெய் சேர்த்து, அடுப்பை அணைத்து வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். கவுனி அரிசி அல்வா ரெடி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT