மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

14th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

 

தேங்காய்த் துருவல் மீதமாகி விட்டதா?  லேசாக வதக்கி சிறிது உப்பு கலந்துவைத்தால், மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம் வீணாகப் போகாது. 

காளான் கறி சமைக்கப் போவதற்கு முன், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு (500 கிராம் காளானுக்கு) சேர்த்து சமைக்கவும். காளான் கறி ருசியாக இருக்கவும்.

மாங்காய் சீசனில் பாகற்காய் கறி சமைக்கும்போது, சில துண்டுகள் மாங்காயை அதில் போட பாகற்காயில் கசப்பு நீங்கும்.

ADVERTISEMENT

 அல்வா தயாரிக்கும்போது, வாணலியில் ஒட்டும். இதைத் தவிர்க்க,  அல்வா தயாரிக்கும் முன் ஒரு மேஜை கரண்டி மாவை வாணலியில் போட்டு வறுத்தவுடன் வாணலியை உபயோகியுங்கள். ஒட்டவே ஒட்டாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT