தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 7 அல்லது 8
சின்ன வெங்காயம் - 10
புளிச்சாறு - எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிப்புக்கு
வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மசாலாவுக்கு:
மல்லி - 5 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
வெந்தயம் - அரை தேக்கரண்டி
செய்முறை:
மசாலாவுக்காக என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிக்காய் மென்மையாக வதங்கும் வரை வதக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுதடுத்து, உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
புளிச்சாற்றை அதனுடன் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்து கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், மத்து அல்லது கரண்டியால் கத்தரிக்காயை மசித்து, அவற்றோடு வெல்லத்தையும் சேர்க்கவும். குழம்பு அடர்த்தியானதும், மசாலா தூளைச் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். அவற்றிலிருந்து எண்ணெய்ப் பிரியும்வரை கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையால் தாளித்துக் கொள்ளவும்.