மகளிர்மணி

சேமியா கேசரி

தினமணி

தேவையானவை:

சேமியா - 1  கிண்ணம்
தண்ணீர் - 1 1/2  கிண்ணம்
சர்க்கரை -  அரை கிண்ணம்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
குங்குமப்பூ - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
முந்திரி - சிறிது

செய்முறை: 

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத் தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் மீண்டும் அரை தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சேமியாவை சேர்த்து, நீர் வற்றி சேமியா நன்கு வெந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, குங்குமப்பூ மற்றும் கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின்பு அதில் நெய் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி, ஏலக்காய்ப் பொடி மற்றும் முந்திரி சேர்த்து பிரட்டி இறக்கினால், சேமியா கேசரி ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT