மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: நிஜவாழ்க்கையே கதையாகிறது!

ஸ்ரீ


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று "சித்தி 2'.

இதில் ப்ரீத்தி சர்மா நாயகியாகவும், நந்தன் நாயகனாகவும் நடித்து வருகிறார்கள். யாழினி என்ற கதாபாத்திரத்தில் மென்மையான வில்லியாக நடித்து வருபவர் தர்ஷணா. தர்ஷணா தனது சின்னத்திரை அறிமுகம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

சின்னத்திரைக்குள் வந்த அனுபவம் குறித்து?

நான் பேஸிக்கா ஃபேஷன் டிசைனர். அதனால் செலிபிரிட்டிகளுக்கு ஆடைவடிவமைப்பாளராக இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சின்னத்திரைக்குள் வந்தேன். அப்போதுதான் ஆதித்யா சேனலோடு ஹெட் சொன்னார், "" நீங்கள் தொகுப்பாளராகலாமே முயற்சி பண்ணி பாருங்களேன்'' என்றார். இப்படி தானாக தேடி வந்ததுதான் நிகழ்ச்சி தொகுப்பாளர் வாய்ப்பு. நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணித்தது ஒரு அழகான அனுபவம். அதிலிருந்து இப்போது அடுத்தகட்ட பயணமாக நடிகையாகி இருக்கிறேன். இதுவும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.

"சித்தி 2' பயணம் எப்படி தொடங்கியது?

சித்தி2வில் நடிக்கிறீங்களா? என்று கேட்டதும், ராதிகா மேடமோட தொடர் என்பதால் ஏதோ வேகத்தில் உடனே ஒத்துக் கொண்டேன். ஆனால், உள்ளுக்குள் ஒரே பயம். காரணம், நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் போதும் இப்படித்தான் எதுவுமே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கற்று ஓர் இடத்துக்கு வந்தேன். இப்போது நடிப்பு பற்றியும் எதுவுமே தெரியாது. திரும்பவும் முதலில் இருந்து பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்று யோசித்தேன்.

முதல்நாள் ஷூட்டிங்கில் ஒருவித பயத்துடன் தான் இருந்தேன். ஆனால், சித்தி டீமில் எல்லாரும் ரொம்ப உதவியாகவும், சப்போர்ட்டாகவும் இருந்தார்கள். நடிப்பில் சின்ன சின்ன விஷயங்களையும் கற்றுக் கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதையெல்லாம்தான்டி இப்போது உங்கள் முன்னால் ஒரு நடிகையாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. விரைவில் ஒரு முழுமையான நடிகையாகிவிடுவேன் என்று நம்பிக்கையும் இருக்கிறது.

யாழினி கேரக்டர் திமிராக, பிடிவாதக்காரியாக இருந்தாலும் ஒரு டைமண்ட். நான் வைலண்டான வில்லி அல்ல சைலண்ட்டான வில்லி. இப்படியும் நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் இருக்காங்க என்பதைத்தான் கதையில் காண்பிக்கிறாங்க. அதைப் புரிந்து கொண்டு யாழினிப் போன்று இருப்பவர்கள் மாறினால் நல்லதுதானே.

யாழினியாக ரசிகர்கள் மனதில் பதிந்து வீட்டீர்கள்? வெளியிடங்களுக்கு செல்லும்போது வரவேற்பு எப்படி இருக்கிறது?

சமூக வலைதளங்களில்தான் அதிகமாக கண்டபடி திட்டுகிறார்கள். வில்லி என்றாலே அப்படித்தானே திட்டுவார்கள். அவர்கள் அப்படி திட்டும்போதுதான் அவர்கள் கதையோடு எவ்வளவு ஒன்றியிருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி வெளியிடங்களுக்கு எல்லாம் போகும்போது அப்படி யாரும் திட்டியது இல்லை. மகிழ்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். எனக்கும் இது பிடித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT