தேவையானவை:
கேழ்வரகு மாவு - ஒரு கிண்ணம்
பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ADVERTISEMENT
வாணலியில் நெய் விட்டு, கேழ்வரகு மாவு சேர்த்து லேசாக வறுத்து, அதை தனியாக வைக்கவும். அதே வாணலியில் வெல்லத்தை ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, வாணலியில் விட்டு தேங்காய்த் துருவல், வறுத்த கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பின்னர் தோசைக்கல்லில் சிறுசிறு அடைகளாகத் தட்டி இருபுறமும் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.