மகளிர்மணி

மருதாணியின் மகத்துவம்!

22nd Sep 2021 06:00 AM | - அமுதா அசோக் ராஜா

ADVERTISEMENT

 

மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.

பெண்கள் நகத்தில் அரைத்துப் பூசுவது அழகுக்கு மட்டுமின்றி, உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.

பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாய மாக்கி வடிகட்டி தலைக்குக் குளித்தால் தலைவலி நீங்கும்.

ADVERTISEMENT

மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தேய்த்துவர இளநரை நீங்கி தலைச் சூடு குறைந்து தலைமுடி. செழித்தும், நீண்டும், செம்பட்டையின்றியும் வளரும்.

இலைகளை எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து கை, கால், மூட்டு வலி, கீழ்வாத வலியின் போது தேய்க்க நல்ல குணம் தெரியும்.

ஒரு கைப்பிடி மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து கால் பாதத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பாத எரிச்சல் நீங்கும். பாதமும் மென்மையாக இருக்கும்.

ஒரு கைப்பிடி இலைகளோடு 1 தண்டு விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் இரவில் தடவி, காலையில் கழுவி வர, நமைச்சல், ஊறல் படிப்படியாகக் குறையும்.

இலைகளை அரைத்து நீண்ட நாள் ஆறாத புண் மீது வைத்துக் கட்ட விரைவில் ஆறும்.

ஒரு கைப்பிடி இலையை மஞ்சள், வசம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து கால் ஆணிமேல் வைத்து வெற்றிலை வைத்து கட்டிவர 15 நாட்களில் கால் ஆணி மறையும்.

மருதாணிப் பூக்களை (புதியவை) தலையணையின் அடியில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

மருதாணியின் உலர்ந்த விதைகளை சாம்பிராணியுடன் சேர்த்து தணலில் புகையவிட்டால், பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டி நீங்கும். கொசு, விஷப் பூச்சிகள் அண்டாது.

Tags : magaliarmani henna
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT