மகளிர்மணி

சேனைக்கிழங்கு வடாம் அவியல் 

ராதிகா அழகப்பன்


தேவையானவை:

சேனைக்கிழங்கு - கால் கிலோ
வடாம் - 10
தேங்காய்த்துருவல் - 1 டம்ளர்
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சேனையை நன்கு சுத்தம் செய்து, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, அவித்து தண்ணீரை வடித்துவிடவும். வடாம்களை எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் இவைகளைச் சேர்த்து மிக்சியிலிட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் அவித்த சேனைத் துண்டுகள், மசாலாக் கலவை, இரண்டையும் போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி, பொரித்த வடாம்கள், உப்பிட்டு வேகவிடவும். கலவையில் நீர் சுண்டி வந்ததும், கடுகு கறிவேப்பிலை தாளித்த பின் இறக்கவும். சேனைக்கிழங்கு, வடாம் அவியல் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT