மகளிர்மணி

சாம்பார் மணமாக இருக்க...

ஆர். கீதா

சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கிண்ணம் புழுங்கலரசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும்போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

கொத்துமல்லி தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும்போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காய்ப் போட்டு அரைத்தால் துவையலின் சுவையும், மணமும் கூடும்.

தேங்காய் சட்னி அரைக்கும்போது புளிக்குப் பதிலாக சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து அரைத்தால் ருசியாக இருக்கும்.

பக்கோடா செய்ய கடலைமாவுக்கு பதில் கடலைப்பருப்பை பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

அவியல் செய்யும்போது அதில் விடுவதற்கு தேங்காய் எண்ணெய் இல்லாவிட்டால் தேங்காய் அரைக்கும் போது அதனுடன் கொஞ்சம் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்தால் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

நெய்யைக் காய்ச்சி இறக்கும்போது அரை தேக்கரண்டி வெந்தய்த்தைப் போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

பழங்களை பிரிட்ஜில் வைக்கும்போது பாலித்தீன் பையினுள் போட்டு வைக்காமல் திறந்த பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் கெடாமலிருக்கும்.

சாம்பார், குழம்பு, ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்துப் பாருங்கள். மணமும் சுவையும் ஊரையே கூட்டும்.

காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும்.

வற்றல் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்தால் உப்பு குறைந்து சுவை கூடிவிடும்.

கூட்டு, குழம்பு ஆகியவற்றுக்கு அரிசி மாவைக் கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துப் பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சீக்கிரமாக ஊசியும் போகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT