மகளிர்மணி

சேனைக்கிழங்கு  டிலைட் 

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

சேனைக்கிழங்கு - கால் கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு விழுது - 1தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிது


செய்முறை:

சேனைக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, நீரிலிட்டு முக்கால் பதத்திற்கு அவித்து தண்ணீரை வடித்துவிடவும். இதை வாணலியிலிட்டு போதிய அளவு நீர் சேர்த்து மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேங்காய்த் துருவல், பூண்டு விழுது, இஞ்சி விழுது, கரம்மசாலா, உப்பு இவைகளைச் சேர்த்து நன்கு கலந்து, வேக வைக்கவும். கலவை நன்கு வெந்து, நீர் முழுதும் சுண்டினதும், எண்ணெய்விட்டு பிரட்டிக் கொடுத்து, ஐந்து நிமிடம் குறைந்த தணலில் வைக்கவும். மசாலா கலவை சேனையில் நன்கு தோய்ந்து கமகம வாசனை வந்ததும், வெண்ணெய்யைச் சேர்த்து கிளறி கொடுத்து, இரண்டு நிமிடத்தில் இறக்கவும். நறுக்கிய கொத்துமல்லி கீரையை தூவவும். சேனைக்கிழங்கு டிலைட் ரெடி. சாம்பார் சாதம், ரசசாதம், தயிர்சாதம் இவைகளுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT