மகளிர்மணி

இந்தியாவின் இளவயது கவிதாயினி!

22nd Sep 2021 06:00 AM | - பூர்ணிமா

ADVERTISEMENT


கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும் குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களது திறமையை வெளிப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறதென்றே கூறலாம். தங்கள் கற்பனா சக்தியை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள், ஓவியம் வரைதல், கதை, கவிதைகள் எழுதுவது என நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொண்டுள்ளனர்.

பெங்களூரு பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மாணவியான 12 வயது அமானா, ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர், அவற்றிலிருந்து 61 கவிதைகளை தேர்வு செய்து, "எக்கோஸ் ஆப் சோல்புல் போயம்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவரது சாதனையை அங்கீகரித்த இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ் இந்தியாவின் இளவயது கவிதாயினி என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து ஆசியா புக் ஆஃப் ரிகார்ட்ஸ் தங்கள் சார்பில் இளம் வயதிலேயே அமானாவின் கவிதை எழுதும் திறமையை பாராட்டி கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. இவ்விரு பட்டங்களும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகும்.

அமானா ஆறாவது வகுப்பு படிக்கும்போதே, ஆங்கிலத்தில் இவர் எழுதும் கட்டுரைகளை படித்த இவரது ஆசிரியை, இவருக்கிருக்கும் திறமையை பலரும் அறியும் வகையில் பாராட்டியுள்ளார். பொதுமுடக்கம் இவருக்குள் இருந்த திறமையை வெளிக் கொண்டு வர உதவியது. நீங்கள் கவிதை எழுதுவதன் நோக்கம் என்ன என்று கோட்டோம்.

""கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டபோது, இணையதளம் வழியே பாடங்கள் துவங்கும் வரை நேரத்தை எப்படி கழிப்பது என்பது பெரும் சிரமமாக இருந்தது. சுற்றிலும் உள்ள மக்கள் இந்த இக்கட்டான சூழலில் பயத்துடன் வீட்டிற்குள் அடங்கியிருப்பதைக் கண்டேன். இதை அடிப்படையாக வைத்து ஆறுதல் அளிக்கும் வகையில் கவிதைகளை எழுதலாமே என்று தோன்றியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குள் 60 கவிதைகளை எழுதி முடித்தேன். இதுவரை ஆங்கிலத்தில் 275 கவிதைகளையும், ஹிந்தியில் 25 கவிதைகளையும் எழுதியுள்ளேன். இவற்றில் முதல் தொகுப்பாக 61 கவிதைகளை தேர்வு செய்து புத்தகமாக வெளியிட்டேன்.

ADVERTISEMENT

என்னுடைய கவிதைகள் சமாதானம், நன்றி கூறுதல், வறுமை, சுற்றுச் சூழல், சிறுவயது கனவுகள், விவசாயிகள், குடும்பம் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து எழுத பட்டவையாகும்.

சில உண்மைச் சம்பவங்களையும், அனுபவங்களையும் கவிதையாக எழுதுவது பிடித்திருக்கிறது. முதல் தொகுப்பைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டுள்ள நிலையில் மூன்றாவதாக என்னுடைய கதைகளையும் புத்தகமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது என்கிறார் அமானா.

இவரது தாய் டாக்டர் லதா, கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் பொது ஜனத் தொடர்பு அதிகாரியாக உள்ளார். தன்னுடைய மகள் அமானாவைப் பற்றி கூறுகையில், ""சிறுவயது முதலே அமானாவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். நிறைய புத்தகங்களை வாங்கி தரும்படி கேட்பாள். அவளது கவிதைகளை அவள் விருப்பப்படியே புத்தகமாக வெளியிட்டோம். இதனால் அவளுக்கு தேசிய அளவில் பாராட்டுகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

Tags : magaliarmani youngest poetess
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT