மகளிர்மணி

சிந்துவுக்கு முக்கியத்துவம்!

22nd Sep 2021 06:00 AM | - அங்கவை

ADVERTISEMENT


சமீபத்தில் ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற வீராங்கனை பி வி சிந்து, நடிகையான தீபிகா படுகோனின் அழைப்பின் பேரில் மும்பை வந்திருந்தார். இரவு ஹோட்டல் ஒன்றில் விருந்து.

தீபிகாவும், சிந்துவும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர். தீபிகாவின் கணவர் நடிகர் ரன்வீர் சிங் தாமதமாக வந்தார். முதலில் வந்த தீபிகா, சிந்து அங்கிருந்த ஊடகங்களுக்கு படம், வீடியோ பிடித்துக் கொள்ள நேரம் ஒதுக்கினர்.

வந்த ஊடகங்களில் சிலர் தீபிகாவிடம்... "மேடம்... தனியாக நில்லுங்கள்... உங்களைத் தனியாகப் படம் எடுக்க வேண்டும் " என்றனர்.

அதற்கு சிந்துவைக் கை காட்டி "இவரைத் தனியாக படம் பிடியுங்கள்.... இல்லை எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து எடுங்கள்..: என்றார் தீபிகா.

ADVERTISEMENT

இந்த பதிலை ஊடகங்களும் சரி.. சிந்துவும் சரி... சற்றும் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி பத்திரிகையாளர்கள் சிந்து, தீபிகா படுகோன் இருவரையும் சேர்த்து படங்களை பிடித்து முடித்தனர்.

Tags : magaliarmani Importance for Sindh!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT