மகளிர்மணி

கருமையைப் போக்க இயற்கை வழிகள்!

22nd Sep 2021 06:00 AM | - கவிதாபாலாஜிகணேஷ் 

ADVERTISEMENT

 

அரை தேக்கரண்டி எலுமிச்சை சாற்றில் 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

ஓட்ஸ் உடலுக்கு மட்டும் நல்லதல்ல, சருமத்திற்கும் தான். அதிலும் ஓட்ûஸ பொடி செய்து, தக்காளி கூழ் உடன் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கழுத்தில் உள்ள கருமை அகலும். குறிப்பாக இம்முறையை முகத்திற்கு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் அற்புதமான பொருள். அத்தகைய பேக்கிங் சோடாவை நீரில் கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

ADVERTISEMENT

வெள்ளரிக்காயை துருவி, ரோஸ் வாட்டர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து, கழுவும் முன் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மறையும்.

தயிர் ஓர் சிறப்பான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். 1 டீஸ்பூன் தயிரில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி ஊறவைத்து கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். இன்னும் சிறப்பான பலனைப் பெற அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி காயை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைக் காணலாம்.

Tags : darkness magaliarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT