மகளிர்மணி

மழைக்காலத்தில் ஏற்ற 7 உணவுகள்!

கூ.முத்துலட்சுமி

மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று செரிமான பிரச்னை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த  ஏழு முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க உதவும். வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மூலமாகும். 

ஓட்ஸ்:

நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக ஓட்ஸ் கருதப்படுகிறது. ஓட்ஸ் உப்புமா முதல் ஓட்ஸ் கிரானோலா பார்கள் வரை பல்வேறு வழிகளில் ஓட்ஸினை உணவில் சேர்க்கலாம். அல்லது சாதாரணமாக ஓட்ûஸ கஞ்சி வைத்தும் குடிக்கலாம்.

ஆளி விதைகள்:

ஆளி விதை-பூக்கும் தாவரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து இரண்டும் அதிகம் நிறைந்துள்ளது. ஆளி விதைகள் நீரிழிவு நோயாளிகளின் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, வழக்கமான உணவில் ஆளிவிதை சேர்க்க ஒரு சிறந்த வழி ஆளிவிதை ரைதா ரெசிபி தான். அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் கலந்து அதில் மேலும் புதினா மற்றும் உப்பு சேர்த்து சாப்பாட்டு சைடு டிஷ்-ஆக பரிமாறினால் ருசியாக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் பேரிக்காய்:

ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தை விட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால்தான் அதன் தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் பழங்களை அப்படியே சாப்பிடும்போது சிறந்த பலனை தருகின்றன.

புரோக்கோலி:

புரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இந்த சுவை நிரம்பிய காய்கறியை சிறிது எண்ணெய், உப்பு மற்றும் பூண்டுடன் வெறுமனே வறுத்து சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளன.

பருப்பு:

பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால் அவற்றில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகளுடன் காணப்படும் நார்ச்சத்து உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் மனதையும் உடலையும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் முதல்  முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் சிறிதளவு நட்ஸ்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி, பாலில் நட்ஸ் கலந்து சாப்பிடுவது போன்ற விதவிதமான முறையிலும் நீங்கள் நட்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT