மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

8th Sep 2021 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்களில் ஒன்று "பாக்யலட்சுமி'. இந்தத் தொடரில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், திடீரென தொடரில் இருந்து விலகினார். இது குறித்து, அவரது ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் அவரிடம் தொடர்ந்து ஏன் சீரியலில் இருந்து விலகினீர்கள் எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ரசிகர்களின் கேள்விக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் ஜெனிஃபர், ""முதலில் ராதிகா கதாப்பாத்திரம் மிகவும் அமைதியானவளாக உருவாக்கப்பட்டது. ஆனால், திடீரென கதாபாத்திரம் நெகட்டிவாக மாறியது. மேலும், வரும் காலங்களில் வில்லியாகவும் மாற இருக்கிறது. வில்லியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தான், தொடரில் இருந்து விலகினேன்.

ஆனால், தொடரில் இருந்து நான் விலகியதும் ரசிகர்களிடம் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்தன. அப்போதுதான் புரிந்தது ராதிகா கதாபாத்திரத்துக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்று. இதை நான் கனவிலும் நினைக்கவில்லை.

ADVERTISEMENT

ஆனால், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல கதையம்சம் உள்ள தொடரில் பாஸிட்டிவான கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதனால், இனி அதுபோன்ற தொடர்களை தேர்வு செய்து, தொடர்ந்து நடிப்பேன். ரசிகர்கள் காட்டிய அன்புக்கு மிக்க நன்றி" என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வெண்பாவுக்கு வளைகாப்பு!

"பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பரீனா அசாத். இவர், கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமீபத்தில் சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளையும் வாழ்த்துகளையும் எதிர் கொண்டார்.

இந்நிலையில், பரீனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஆனால், பரீனா வெளியிடாத இந்தப் புகைப்படம் விஜய் தொலைக்காட்சியின் பேன் பேஜ் பக்கத்தில் வெளியாகியுள்ளது. எனவே, விஜய் டிவியின் சார்பில் இந்த வளைகாப்பு நடைபெற்றிருக்கலாம் எனவும், இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படலாம் எனவும் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேசமயம், பரீனாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Tags : magaliarmani Logo Lightning!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT