மகளிர்மணி

ஐந்நூறு  படிப்புகளை  முடித்த கேரள மாணவி!

8th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

 

ஐந்நூறு படிப்புகளை படித்து சாதனை படைத்துள்ளார். கேரளா மாணவி சோனா பெல்சன்.

சோனா பெல்சன் திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பொது முடக்கத்தையொட்டி ஐந்நூறு அடிப்படை படிப்புகளைப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதில் சோனா பெல்சனும் பங்கேற்றார் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.

பொதுமுடக்கத்தையொட்டி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இலவச இணைய வழி படிப்பைப் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது.

ADVERTISEMENT

எதிர்காலப் படிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தப் படிப்புக்கு உடனே பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நானும் பதிவு செய்தேன். 90 நாள்களில் 500 அடிப்படை படிப்புகளில் தேர்ச்சிப் பெற்றுள்ளேன்.

கல்லுமலாவில் உள்ள கலைக் கல்லூரியில் பணியாற்றும் பொருளாதார உதவி பேராசிரியர் அனிஷ் குமார் கூறும் போது, உலகம் முழுவதிலும் இருந்து 124 பல்கலைக்கழகங்கள் அடிப்படை படிப்புகளுக்கான தேர்வை நடத்தின. மாணவர்கள் இலவசமாகப் படிக்க பல்கலைக்கழக மானியக்குழு ஏற்பாடு செய்திருந்தது. எந்தப் படிப்பை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். சில மாணவர்கள் 50 படிப்புகளை முடித்துள்ளனர்.

சோனா பெல்சன், 500 படிப்புகளை முடித்திருக்கிறார். சோனாவின் சாதனையால் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.

Tags : magaliarmani Kerala student completes 500 courses
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT