மகளிர்மணி

குறளும்-படமும்!

8th Sep 2021 06:00 AM | - எஸ். பாண்டியன்

ADVERTISEMENT


திருவள்ளூர்-பூண்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி செ.லக்க்ஷனா ஒன்றரை மணி நேரத்தில், 1,330 திருக்குறளையும் கூறியவாறு திருவள்ளுவர் படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

1,330 திருக்குறள்களையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் பயிற்சியை அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் அளித்தனர். 

அனைவரும் திருக்குறள் கற்று, அதன் வழியில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலம் நற்சிந்தனையையும் வளர்க்க முடியும் என்பதை வலியுறுத்தும் நோக்கில், சாதனை நிகழ்வுக்காக தயாராகி வந்தார்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் வாய்ப்பு வழங்கிய நிலையில், சாதனை நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அருங்காட்சியகத்தின் காப்பாளர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். இதில் மாணவி செ.லக்க்ஷனா 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லிக்கொண்டே 13 அடி அகலத்திலும், 30 அடி நீளத்திலும் திருவள்ளுவரின் படத்தை 1.30 மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT

இச்சாதனை நிகழ்வில் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள் செந்தில்குமார், அப்புன் ஆகியோர் மாணவியை வழி நடத்தினர். இதில் சிவராமன் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

""உலகிலுள்ள அனைத்து மக்களும் திருக்குறள் வழியில் செல்லவும் திருக்குறளை பின்பற்றி ஒழுக்க நெறியிலும் நற்சிந்தனையிலும் செழித்தோங்க வேண்டும். அனைத்து மாணவர்களும் திருக்குறளை பயின்றால் மனப்பாட சக்தி அதிகமாகும் கல்வியில் வளர்ச்சி பெற்று நாட்டையும் வீட்டையும் முன்னேற்றலாம் என்பதே தனது விருப்பம்'' என்கிறார் மாணவி செ.லக்க்ஷனா.

இச்சாதனை நிகழ்வு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் கலாம் புக் ஆஃப் அவார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற உள்ளது.

Tags : magaliarmani kural - movie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT