மகளிர்மணி

பிரண்டைஇலை துவையல் 

கவிதா பாலாஜி

தேவையானவை :

இளம் தளிரான பிரண்டை இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் - 2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:  

பிரண்டை இலை துவையல்.  பிரண்டை யின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும். அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும். அனைத்தும் அரை பட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையைச் சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும். சத்தான இஞ்சி பிரண்டை  இலை துவையல் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT