மகளிர்மணி

காய்களை  விரைவாகவும் பதமாகவும்  வேகவைக்க வேண்டுமா?

20th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


சமைக்கும்போது கூட்டு, பருப்பு, சாம்பார், லேசாக அடிப்பிடித்து விட்டால் அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி சிறிது எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறினால் தீய்ந்த வாசனை வராது.

குழம்பு வைக்கும்போது வெண்டைக்காய் உடைந்து விடாமல் இருக்க, வெண்டைக்காயை வதக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றினால் வெண்டைக்காய் துண்டுகள் உடைந்து விடாமல் இருக்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும் மற்றும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

பூசணிக்காய் அல்வா செய்வதற்கு முன், பூசணிக்காயின் மேல்தோலை சீவி விட்டு காயை அரை மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். பிறகு அதைத் துருவினால் சீராக வரும். அல்வாவும் கெட்டியாக இருக்கும்.

ADVERTISEMENT

காலிஃப்ளவர் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை எளிதாக அகற்ற காலிஃப்ளவரை வேக வைக்கும்போது சிறிது பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூவில் உள்ள கசப்பு தன்மை நீங்க முதலில் களைந்த அரிசித் தண்ணீரில் சிறிதுநேரம் போட்டு வைக்கவும். பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால் கசப்பு குறையும்.

மாங்காய்களை தோல் சீவி பிறகு துருவி வெயிலில் ஒன்றிரண்டு நாட்கள் உலர்த்தினால் சருகாக உலர்ந்துவிடும். இதை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொண்டால் புளிப்புச் சுவை தேவைப்படும் சமையலில் உபயோகித்துக் கொள்ளலாம்.

காய்களை விரைவாகவும் பதமாகவும் வேகவைக்க வேண்டுமா? தோல் சீவிய காய்களை வேகவிடும்போது முதலில் தண்ணீரைக் கொதிக்க விட்டு, பின்னர் காய்களைப் போட வேண்டும். தோலுடன் கூடிய காய்களை வேகவிடும்போது காய்களை பச்சைத் தண்ணீரில் போட்டு பிறகு வேக வைக்க வேண்டும்.

Tags : magaliarmani vegetable quickly and evenly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT