மகளிர்மணி

பிரண்டை ரசம் 

20th Oct 2021 06:00 AM |  - கவிதா பாலாஜிகணேஷ்

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிரண்டை - கால் கிண்ணம்
துவரம்பருப்பு - கால் கிண்ணம்
கடுகு - 1தேக்கரண்டி
வரமிளகாய் - 3
பூண்டு பல் - 5
மிளகு, சீரகம்- தலா 2  தேக்கரண்டி
பெருங்காயம் - அரை  தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

ADVERTISEMENT

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து குழைய விடுங்கள். நீரை வடிகட்டி மசித்து கொள்ளுங்கள். பிரண்டையை சிறுதுண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு லேசாக வதக்கி எடுக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கி வதக்கிய பிரண்டை துண்டுகளைச் சேர்க்கவும். பிறகு பருப்பு நீரை சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை  நன்றாக வெந்ததும் மஞ்சள் தூள், மசித்த துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதை சூப் போன்று குடிக்கவும் செய்யலாம் அல்லது சாதத்தில் ரசம் போன்று  போட்டு பிசைந்தும் கொடுக்கலாம்.

Tags : magaliarmani Brandy broth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT