மகளிர்மணி

கொய்யாப் பழத்தின் நன்மைகள்!

20th Oct 2021 06:00 AM | - அமுதா அசோக்ராஜா 

ADVERTISEMENT


கொய்யா பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளன.  மேலும், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பழம் மட்டுமல்லாமல், இலை, பட்டை என அனைத்திலும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது.

கொய்யாப் பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:

கொய்யாப் பழத்தில் போலிக் அமிலம், வைட்டமின் பி9 போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.

வேதி பொருள் கலந்த சாப்பாட்டை உண்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இதை நொடியில் போக்க உணவு உண்ட பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும், கல்லீரலை பலப்படுத்த அடிக்கடி கொய்யாப் பழத்தை சாப்பிடுவது நல்லது.

ADVERTISEMENT

நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

சாப்பிடுவதற்கு முன் கொய்யாப் பழத்தை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். அதேபோல் இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது, குறிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது.

Tags : magaliarmani Benefits of Guava Fruit!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT